Friday, November 14, 2008

கருணாநிதியும் காமெடியும்

மச்சான் நீ கேளேன் ?

மச்சி நீ கேளேன் ?

நீ கேளேன் ?

நீயாவது கேளேன் ?

அட ஆற்காடு நீயாவது கேளேன் ?


சரி வழக்கம்போல நானே சொல்லுறேன் என்ன கேகுணும்னு ....

நீங்க ராஜினாமா செய்ய வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவும், வைகோவும் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இரு சாராரையும் தூண்டிவிட்டு சண்டைப் போட வைத்திருப்பார்களோ ?

வழக்கம்போல நானே பதில் சொல்றேன் :

இப்பிரச்சனை தொடர்பாக திமுக செயற்குழு கூட்டத்திலும், அனைத்துக் கட்சி கூட்டத்திலும் முடிவு செய்யப்படும் இரு தரப்பினரின் (விடுதலைப் புலிகள், இலங்கை அரசு) நிலை தெரியாமல், ஒரு தரப்பை மட்டும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. அதனால்தான் இலங்கைப் பிரச்சினை பற்றி பேசும்போதோ, நிலை எடுக்கும்போதோ முரண்பட்ட கருத்துகள் எதிரொலிக்கின்றன. எனவே இரு தரப்பினரும் இன்று ஈடுபட்டுள்ள சண்டை ஒத்திவைக்கப்பட்டு - நடுநிலை நாடுகளுடன் இந்தியாவும் ஒப்புக்கொள்ளக்கூடியதான சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு - அதன் இறுதிக் கட்டமாக நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பது என் கருத்து ( ஆகா இப்போதைக்கு தப்பிச்சோம்டா சாமீ ....."இன்னுமா இந்த ஊர் நம்மள நம்புது?"')

ஆற்காடு : முரசொலில வரணும் ஓகே?


காவல்துறை முதல்-அமைச்சரின் பொறுப்பிலே இருப்பதால் - சமீபகாலத்தில் காவல் துறை மீது குற்றச்சாட்டுகள் அதிகமாகச் சொல்லப்படுகிறதே?

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.?? !! காவல்துறையினர் உள்ளே நுழைந்து சமாதானம் செய்திருந்தால், நீங்கள் உங்கள் பத்திரிகையில் ? ( பத்திரிகை செய்தி தான் முக்கியம்?? அயோடா ! அடிபட்டவன் கிடையாது !! சட்டம் ஒழுங்கு கிடையாது !! ) என்ன போடுவீர்கள்? சட்டக் கல்லூரிக்குள் காவலர் நுழைந்து தடியடி நடத்தினர் என்று போடுவீர்கள்.

தமிழ்நாட்டில் இரண்டு இடைத்தேர்தல் வரபோகிறது. அதிலே தி.மு.க., தோழமைக் கட்சிகள் போட்டியிடுமா?

தேர்தல் வரட்டும், வந்தபிறகு பேசுவோம். ( அடடா !!)

பாராளுமன்றத் தேர்தலுக்கு தி.மு.க.தயாராகி வருகிறதா?
எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் வருகிறோம். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவே தயாராக வந்திருக்கிறேன் அல்லவா?

பா.ம.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே மீண்டும் உறவு வர வாய்ப்பு இருக்கிறதா?
எதுவும் நடக்கலாம். ( ராமதாஸ் உன் பையனுக்கு பெரிய மந்திரி பதவி வாங்கி தந்ததல்லாம் மறந்துடாத !! )

No comments: