Wednesday, November 5, 2008

“ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை"

“ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் ஒரு குறிப்பிட்ட கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’. “பயங்கரவாத எதிர்ப்பு” என்ற பெயரில் தனது உலக மேலாதிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு புஷ்ஷுக்குக் கிடைத்த 9/11 கூட இன்று கிழிந்து கந்தலாகிவிட்டது. ஆனால் ராஜீவ் எனும் இந்த ஆயுதம் மட்டும் 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் முனை மழுங்காமல் தமிழ் மக்களுக்கு எதிராகப் பாய்ந்து கொண்டே இருக்கிறது. காரணம், அதனை யாரும் எப்போதும் திருப்பித் தாக்கியதில்லை என்பதுதான்.


ராஜீவ் கொலை குறித்த பிரச்சினை எழுப்பப் படும்போதெல்லாம், “அதனை மறந்து விடக்கூடாதா, மன்னித்து விடக்கூடாதா” என்று மன்றாடுகிறார்கள் பல தமிழுணர்வாளர்கள் . ஆனால் இந்த இக்கும்பலிடம் இதுவரை பலிக்கவில்லை.


ஈழப் பிரச்சினைக்காக தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகளும், சினிமா உலகினரும் போராடிக்கொண்டிருப்பதைப் போல தோற்றம் கொண்டிருக்கும் சூழ்நிலையைத்தான் ஊடகங்கள் கட்டியமைக்கின்றன. இன்னொரு நாட்டில் மத்திய அரசு இதற்கு மேல் தலையிட முடியாது என்று கைவிரித்து விட்ட கருணாநிதி, ஈழத்தின் உள்நாட்டுப் பிரச்னையில் ராஜீவ்காந்தி தலையிட்டதால்தான் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நானூறு தமிழக மீனவர்கள் சுடப்பட்டார்களே... அது எந்த நாட்டுப் பிரச்னை என்கிறார் கருணாநிதி. குறைந்தபட்சம் கருத்துச் சொல்லியிருக்க வேண்டியதுதானே! ஈராக்கில் அமெரிக்கா தலையிட்டபோது கருணாநிதி கேட்டிருக்கலாமே


கருணாநிதி தற்போது கையேந்தி வசூலித்து வரும் வேளையில் ஈழத்திற்கு நிவாரணத்தை விட போர் நிறுத்தமும், அரசியல் ரீதியான ஆதரவுமே தேவை.


தமிழகத்து மக்கள் ஈழத்தின் துயரில் பங்கெடுக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். இந்த உதவியை தமிழ் மக்கள் செய்யமுடியுமா ? முடியாவிட்டால் உதவுதற்கு வேறு யார் இருக்கிறார்கள் ?


ஆனால் தமிழ்நாட்டில் நடிகர்களும், கருணாநிதியும் ஈழத்தின் அவலத்தை வைத்து நாடகம் தான் நடத்துகிறார்கள்.


“மன்மோகன் அரசே, உன் டாடாவும், அம்பானியும் கொள்ளையடிக்க எங்கள் ஈழத் தமிழர் சாக வேண்டுமா ? என்று எண்ணித்தான் வேதனைப்பட வேண்டியிருக்கிறது.


``தமிழக மக்களிடமே ஓட்டு வாங்கி, பதவியில் அமர்ந்துகொண்டு அந்த மக்களுக்கே துரோகம் செய்கிறார்கள். இனத்திற்கும், மொழிக்கும் துரோகியாக நிற்கிறார்கள்.



No comments: