Thursday, November 13, 2008

ரசித்தது


'எத்தனை புயல்களை நீ சமாளித்துக் கடந்தாய் என்பது முக்கியமல்ல . எத்தனை கப்பலை ஒழுங்காகக் கரை செர்த்தாயா என்பதே முக்கியம்!" - வில்லியம் மீக்லி

புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்உலகை வேரோடு சாய்ப்போம்- பாரதிதாசன்

மனிதன் மனம் வைத்தால் கல்லும் கவிபாடும்..
கன இரும்பும் நடனமாடும்- பொன்மொழி


மகிழ்வை கொண்டாடுவோம்!....

மகிழ்ச்சியாக இருக்க பெரிய காரணம் தேவையில்லை..... இயற்க்கையை பார்த்து, அதன் அழகை பார்த்து மகிழலாம். இன்று கிடைக்கும் சிறு வெற்றியும் மகிழ்ச்சிதானே, இதை இந்த சந்தர்ப்பத்தை விட்டால் கிடைக்காமல் போகலாம் எனவே இதையும் மகிழ்வாக ஏற்றுகொள்ளுங்கள். உங்கள் மகிழ்ச்சி மற்றவரையும் மகிழப்படுத்தலாம்...ஆக ..மகிழ்வை கொண்டாடுவோம்!....

என் மனைவிக்காக ......:)

விழி

விழியின்றி வழியில்லை

வழியின்றி பலர்.

விழிப்போம்

வழிவகுப்போம்

கண்தானத்திற்கு.

- அ. தாட்சாயணி ( தமிழ் முரசு, சிங்கப்பூர் )

சிங்கப்பூர் ஆறு

சென்னையின் கூவத்தை விடக்குமட்டுகின்ற நாற்றத்துடன்,இருந்ததெல்லாம் பழங்கதை.


கொட்டிவிட்ட குப்பைகளும்விழிப்புணர்வைத் தொலைத்தஅடையாளங்களும்படகுகளுக்குப் போட்டியாய்ஆற்றின் பரப்பை அன்றுஆக்கிரமித்திருந்தது,அறிவிப்பு செய்தது அசிங்கத்தை.


மரங்கள் இருந்தும்,உதிர்ந்து விழும்இலைகள் கூட மிதக்காதது,இப்போது சொல்லிவிடும் சுத்தத்தை.


மழைத் தண்ணீரும்,நீர்மட்டம் உயரும் போதுநிலத்திற்குள் வரும்கடல் தண்ணீருமாய்ஓடுகின்ற ஆறு,

நினைத்தால் எதையும்சாதிக்கலாம் என்பதற்குநிறைவான உதாரணமாய்நேரில் காட்சியளிக்கிறது.

- சித. அருணாசலம் ( தமிழ் முரசு, சிங்கப்பூர் )

படித்ததில் பிடித்தது

வேண்டுதல் !!

திரைப்படம் எடுக்கணும்

தொலைகாட்சி

தொடாங்கனும்

பத்திரிகை நடத்தணும்,

பாராளுமன்றம் போகணும்

மந்திரியாகணும்

மாநிலம் ஆளணும்

கடவுளே

என்னை அடுத்த

ஜென்மத்திலாவது

முதல்வரின் பேரனாக்கு!

திரு. ஏ.பி.வள்ளியப்பன் குமுதத்தில் எழுதிய கவிதை.....

No comments: