Wednesday, December 17, 2008

அழகிரி பெயர் "தினகரன்" வழ‌க்‌கி‌‌ல் இல்லையாம் !?

கட‌ந்த 2007ஆ‌ம் ஆ‌ண்டு மே மாத‌ம் 9 ஆ‌ம் தே‌தி தினகர‌ன் ப‌த்‌தி‌ரிகை‌யி‌ல் வெ‌ளியான கரு‌த்து‌க் க‌ணி‌ப்பை‌த் தொட‌ர்‌ந்து, ஆ‌த்‌திரமடை‌ந்த ஒரு கு‌ம்ப‌ல் அ‌ப்ப‌த்‌தி‌ரிகை‌யி‌‌ன் மதுரை அலுவலக‌து‌க்கு‌ள் புகு‌ந்து தா‌க்குத‌ல் நட‌த்‌தியதோடு, ‌தீ வை‌த்து‌ம் கொளு‌த்‌தின‌ர்.இ‌ந்த தா‌க்குத‌லி‌ல் ‌அ‌ந்த அலுவலக‌த்‌தி‌ல் ப‌ணிபு‌ரி‌ந்து வ‌ந்த கோ‌‌பிநா‌த், ‌வினோ‌த்குமா‌ர், மு‌த்துராம‌லி‌ங்க‌ம் ஆ‌கிய 3 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள்.

இது தொட‌ர்பாக தா‌க்குத‌லி‌ல் பலியான கோபிநாத் எ‌ன்பவ‌ரி‌ன் தாயார் திலகவள்ளி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு‌த் தொடர்ந்தார். அ‌தி‌ல் மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில், முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதன் உள்ளிட்ட 10 பேரை சேர்க்க வேண்டும் என்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

மதுரை '‌தினகர‌ன்' ப‌த்‌தி‌ரிகை அலுவலக‌ம் தா‌க்க‌ப்‌ப‌ட்டது தொட‌ர்பாக, ம‌‌த்‌திய புலனா‌ய்வு‌க் கழக‌ (‌சி.‌பி.ஐ.) ‌விசாரணை‌க்கு உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் மு.க. அழ‌கி‌‌ரி பெயரை கு‌ற்றவா‌ளிக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் சே‌ர்‌க்க‌க் கோ‌ரியு‌ம் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட மனுவை செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் இ‌ன்று த‌ள்ளுபடி செ‌ய்தது.மனுவை‌ த‌ள்ளுபடி ச‌ெ‌ய்து நீ‌திப‌தி கே. மோக‌ன் ரா‌ம் கூறுகை‌யி‌ல், இ‌ந்த மனு ‌இ‌ங்கு விசாரணை‌க்கு ஏ‌ற்புடையது அ‌ல்ல எ‌ன்று‌ம் இ‌ந்த வழ‌க்கு‌த் தொட‌ர்பாக மனுதார‌ர் உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ மதுரை ‌கிளையை அணுக வே‌ண்டு‌ம் எ‌‌ன்று‌ம் உ‌த்தரவ‌ி‌ட்டா‌ர்.

இ‌ந்த வழ‌க்‌கி‌ல், ம‌த்‌திய புலனா‌ய்வு‌க் கழக ‌சிற‌ப்பு வழ‌க்க‌றிஞ‌ர் ச‌ந்‌‌திரசேகர‌ன் ஆஜரா‌கி வா‌திடுகை‌யி‌ல், இ‌ந்த வழ‌க்‌கி‌‌ல் அழ‌கி‌ரி‌யி‌ன் பெயரை‌‌ச் சே‌ர்‌க்கவு‌ம், அவரு‌க்கு எ‌திராக கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரிகை தா‌க்க‌ல் செ‌ய்யவு‌ம் எ‌ந்த‌‌வித முகா‌ந்‌திரமு‌ம் இ‌ல்லை எ‌ன்று கூ‌றினா‌ர்.

என்னடா இது ? நடப்பது என்ன ?

Sunday, December 14, 2008

ஸ்வீட் எடு கொண்டாடு !

நல்லது நடந்தால் ... எல்லோருக்கும் மகிழ்ச்சிதான் ..... இன்று நல்ல நாள் .... மானிட இனத்தின் துரோகி அமெரிக்க அதிபர் புஷ ஊடகவியாளர்களை சந்தித்துப் பேசினார்.அங்கு அவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில்,ஈராக் ஊடகவியாளர் ஒருவர் பாதணியால் தாக்கினார். அதிபர் செருப்படியில் இருந்து லாவகமாக தப்பினர் இதில் இராக் அதிபருக்கு வருத்தம் தான் ! அடுத்த முறை சரியா செருப்பால் அடிக்க இராக் மக்கள் சார்பில் உறுதி எடுத்து கொண்டார்..

அமெரிக்க அதிபர் புஷ் "அந்த பாதணி சைஸ் பத்து.".... என்று உலகமக்களுக்கு பெருமையுடன் தெரிவித்துக் கொண்டார் !

இராக் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறார்கள் ....
ஸ்வீட் எடு கொண்டாடு !
இதுக்குதான் நம் கோவில்களில்
பாதணி அணித்து செல்ல
அனுமதி இல்லையோ ?


பத்திரிக்கையாளர்களை
தீவிர சோதனை செய்தது
ஆயுதம் வைத்திருக்கிறீர்களா என்று
ஆனால்,
அதை விட அதிக வலிமையுடைய
எழுதுகோளையும்,
நாவையும்,
செருப்பையும்
அல்லவா உங்களுடன்
எடுத்துச் சென்றிருக்கிறீர்கள்! ( நன்றி : தமிழச்சி )
என்ஜாய்... பேபி.....

Tuesday, December 2, 2008

தமிழகத்தில் காங்கிரஸ் துணையில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது

(இடுக்கண் வருங்கால் நகுக! அதனைஅடுத்தூர்வது

அஃது ஒப்பது இல் .

வாழ்வில் துன்பங்கள் நிகழும் தருணங்களில் அத்துன்பத்தை பார்த்து நகைத்துவிடு !! எதிர்த்து வரும் துன்பத்தை தொலைத்து விட அதைவிட சிறந்த வழியொன்றுமில்லை. - திருவள்ளுவர்.)

தமிழகத்தில் காங்கிரஸ் துணையில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோது முதலில் குரல் கொடுத்தது காங்கிரஸ்தான் (அடங்க ?! ). வறுமை ஒழிப்புக்காக, மருத்துவ வசதிக்காக, ஏழைகளின் உயர்கல்விக்கு என பல திட்டங்கள் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. ( எடுத்து .... சொல்லுங்க !)


இன்று இந்தியாவில் 72 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர் (யாரு அது ஸ்டாலின் & விஜயகாந்த் ?). தியாக ( உழல் ) வரலாற்று பின்னணி கொண்ட குடும்பத்து இளைஞரான ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர் (?) . தமிழகத்தில் காங்கிரஸ் மிகுந்த வலிமையுடன் உள்ளது ( நீங்க சொல்லித்தான் மக்களுக்கு தெரியுணும் ). தமிழக ஆட்சியில் பங்கு கேட்டால் நாளையே நாங்கள் ஆட்சியில் இருப்போம் ( கருணாநிதிக்கு நல்ல ஆப்பு !).

தமிழகத்தில் காங்கிரசின் துணையில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது ( ஆமாம் ....தெரியாது பாருங்க ??)

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசும் எந்த கட்சிகளுடனும் எங்களுக்கு உறவு கிடையாது ( அப்போ திருமா, ராமதாசு ?) .

விரைவில் மத்திய அரசு குழு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதத்தை பார்வையிட வருகிறது என்றார் ( அப்போ நீ என்ன தான் செய்யுற ? ! ).