Tuesday, December 2, 2008

தமிழகத்தில் காங்கிரஸ் துணையில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது

(இடுக்கண் வருங்கால் நகுக! அதனைஅடுத்தூர்வது

அஃது ஒப்பது இல் .

வாழ்வில் துன்பங்கள் நிகழும் தருணங்களில் அத்துன்பத்தை பார்த்து நகைத்துவிடு !! எதிர்த்து வரும் துன்பத்தை தொலைத்து விட அதைவிட சிறந்த வழியொன்றுமில்லை. - திருவள்ளுவர்.)

தமிழகத்தில் காங்கிரஸ் துணையில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோது முதலில் குரல் கொடுத்தது காங்கிரஸ்தான் (அடங்க ?! ). வறுமை ஒழிப்புக்காக, மருத்துவ வசதிக்காக, ஏழைகளின் உயர்கல்விக்கு என பல திட்டங்கள் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. ( எடுத்து .... சொல்லுங்க !)


இன்று இந்தியாவில் 72 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர் (யாரு அது ஸ்டாலின் & விஜயகாந்த் ?). தியாக ( உழல் ) வரலாற்று பின்னணி கொண்ட குடும்பத்து இளைஞரான ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர் (?) . தமிழகத்தில் காங்கிரஸ் மிகுந்த வலிமையுடன் உள்ளது ( நீங்க சொல்லித்தான் மக்களுக்கு தெரியுணும் ). தமிழக ஆட்சியில் பங்கு கேட்டால் நாளையே நாங்கள் ஆட்சியில் இருப்போம் ( கருணாநிதிக்கு நல்ல ஆப்பு !).

தமிழகத்தில் காங்கிரசின் துணையில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது ( ஆமாம் ....தெரியாது பாருங்க ??)

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசும் எந்த கட்சிகளுடனும் எங்களுக்கு உறவு கிடையாது ( அப்போ திருமா, ராமதாசு ?) .

விரைவில் மத்திய அரசு குழு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதத்தை பார்வையிட வருகிறது என்றார் ( அப்போ நீ என்ன தான் செய்யுற ? ! ).

No comments: