Thursday, November 13, 2008

இந்தியர்கள் கணக்கில் புலி

வெளிநாடு செல்லும் பெரும்பாலானவர்களுக்கு ஓர் அனுபவம் இருக்கும். "இந்தியர்கள் கணக்கில் புலி" என்பார்கள். இதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால், இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் ஒரு வித்தியாசம் புலப்படும். மற்ற நாடுகளில் பள்ளிக்குச் சென்று முறையாகக் கற்றால்தான் கணிதம் பயிலமுடியும். ஆனால் இந்தியாவில் சில நடைமுறைப் பயிற்சிகளாலேயே பாமரர்கள்கூடக் கணக்கில் புலிகளாக உலா வருவதைக் காண்கிறோம். உதாரணமாக, அமெரிக்காவிலோ ஜப்பானிலோ சினாவிலோ மெக்டொனால்ட்ஸ் அல்லது ஏதாவதொரு கடையில் சென்று பொருள் வாங்கும்போது, பில் போடும் இயந்திரம் என்ன சொல்கிறதோ அவ்வளவு பணத்தைத்தான் கேட்பார்கள். அவ்வியந்திரம் தவறாகச் சொன்னாலும் அதை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. அதுவும் ஒவ்வொரு வாடிக்கையாளராகத்தான் அவர்களால் கவனிக்க முடியும்.

நம் ஊரில் மளிகைக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சி ஒரே ஆளாய் ஒரே சமயத்தில் பத்துப்பேரைக் கவனித்துக்கொண்டு, கடைப்பையன்களுக்கு வேலையையும் சொல்லிக் கொண்டிருப்பார். இடையிடையில் 'என்னண்ணே! அரிசி வாங்கி இருபது நாட்கள் ஆகிடுச்சி! இன்னும் தீரலையா? வெளியூர் ஏதாவது போய்விட்டீர்களா?' என்று ஒவ்வொரு வாடிக்கையாளரைப் பற்றியும் தனித்தனியாகவும் கணித்துக் கொண்டிருப்பார். இதற்கெல்லாம் என்ன காரணம் என்ற கேள்விக்கு இந்நூல் விடையளித்தது. கணக்கு இந்தியர்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தது.

No comments: