Tuesday, November 4, 2008

அமெரிக்காவின் அதிபராகும் முதல் கருப்பர் இனத் தலைவர்


முதல் கருப்பர் இன அதிபராக வெற்றி பெற்றுள்ள ஒபாமாவுக்கு எனது வாழ்த்துகள்
அமெரிக்க அரசியலிலே இனம், நிறம் என்பவை இனிமேலும் ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக இருக்கப்போவதில்லை.

" எனக்கு ஒரு கனவு இருக்கிறது' என்று அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) 45 வருடங்களுக்கு முன்னர் அதே தினத்தில் (ஆகஸ்ட் 28) வாஷிங்டனில் நிகழ்த்திய உரை அந்த இயக்கத்தின் போராட்டங்களில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தனக்கு இருந்த கனவு பற்றி அன்று மார்ட்டின் லூதர் கிங் உரையாற்றிய போது அடுத்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் வெள்ளை மாளிகைக்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கக் கறுப்பர் ஒருவர் வந்துவிட்டார்.
அமெரிக்கா முழுவதுமே ஒபாமாவின் வெற்றியைக் கொண்டாட ஆங்காங்கே மக்கள் கூடியுள்ளனர்.பல இடங்களில் கருப்பர் இன மக்கள் கைகளில் அமெரிக்கக் கொடியை ஏந்தியபடி மகிழ்ச்சியி்ல் கண்ணீர் வடித்தபடி நின்றுள்ளனர்.

அமெரிக்க பொருளாதாரம்

அவருக்கு மேலும் பல வேலைகள் காத்து இருக்கிறது முதலாவதாக உலக நிதிநெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சிறந்த வழியாக, அமெரிக்க அரசு விரைவில் ஒரு புதிய போரை ஆரம்பிக்க வேண்டும்!....யு கேன் கால் இட்...எ " வார் ஆன் ......................." கடந்த 8 ஆண்டுகளாக புஷ் என்ற மனித குல எதிரி செய்த லூசுத்தனமான செயல்களால் உலகம் முழுவதும் அமைதியின்மை நிலவுகின்றது. அதே போல் விவேகமில்லாத போர் முன்னெடுப்புகளாலும், பொருளாதார கொள்கைகளாலும் உலக பொருளாதாரத்தை நிலைகுலைய செய்ததிலும் முக்கிய பங்கு அவருக்கு உள்ளது.

அமெரிக்க பொருளாதாரம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. உயரக் கூடிய எதும் ஒருகட்டத்தில் கீழே வந்தே தீரும் என்ற கோட்பாடு நடைமுறைக்கு வந்து கொண்டிருப்பது போல் உள்ளது. இந்த நிலையில் ஒபாமா அதிபராவதன் மூலம் பொருளாதாரம் மேலும் சீரழிந்தால், ஒபாமா போன்ற கறுப்பர் ஒருவர் வந்ததே இதற்கு காரணம் என அமெரிக்க மக்களிடம் விஷம பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இனி அமெரிக்க அரசியலில் மீண்டும் ஒரு கறுப்பர் அதிபராகும் வாய்ப்பு நிரந்தரமாக பறி போக வாய்ப்பு உள்ளது.

அடுத்து திரு.ஒபாமா ஈராக், ஆப்கன் போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறும் என்று அறிவித்துள்ளார். இதனால் உலகில் இருக்கும் ஆயுத வியாபாரிகளின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அந்த கொடியவர்கள் தங்களது ஆயுத வியாபாரத்திற்காக எவரையும் கொலை செய்ய தயங்கமாட்டார்கள.

அடுத்து பிற நாடுகளில் தனது ஆளுமையை அமெரிக்கா குறைத்துக் கொள்ளும் .இவ்வாறு செய்தால் அமெரிக்காவுக்கு அடி வருடுவதையே தொழிலாகக் கொண்ட பல நாட்டு அரசியல் தலைவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் வாய்ப்பு ஏற்று விடும். குறிப்பாக இந்தியா போன்ற நாட்டு தலைவர்களை மேற்கத்திய வழக்கத்தின் படி நடத்த ஆள் இல்லாததால் திக்குத் தெரியாமல் திணறக் கூடும். பாகிஸ்தான் போன்ற நாடுகள் தங்களது நாட்டின் ஜனாதிபதியாக இதுவரை விளங்கிய அமெரிக்க ஜனாதிபதி இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இது உலகிற்கு பேராபத்தாக முடியும்.

ஒபாமாவில் ஸ்லோகமே மாற்றம் என்பது தான். ஆனால் அமெரிக்க செனட் என்பதே மாற்றங்களை விரும்பாத மாமாக்களைக் கொண்டதே... இதனால் ஒபாமாவுக்கும், செனட்டுக்கும் இடையே பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. ஒரு கட்டத்தில் ஒபாமா காம்பரமைஸ் ஆகவும் வாய்ப்பு உள்ளது.

ஒபாமாவுக்கு கப்பலில் ஏற்படும் ஓட்டையை அடைக்க மட்டுமே தெரியும். ஆனால் அடித் தளமே ஓட்டையாகிப் போன கப்பலை காப்பாற்ற வழி தெரியாது. (மூழ்கும் கப்பலுக்கு கேப்டனாவதில் எந்த பயனும் இல்லை)

ஒபாமா நிறத்தால் கறுப்பரானாலும், அதை பயன்படுத்தி ஓட்டு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடாத போதும், அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் இந்த நிறவெறியை மறைமுகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் இது ஒரு கறுப்பு - வெள்ளையருக்கு இடையேயான பிரிவை மேலும் அதிகரிக்க விரும்புகின்றனர். ஒபாமாவின் வெற்றி மூலம் இந்த வெறி அதிகமாகி விடும்.

பொருளாதார அடியாளாக செயல்படும் அமெரிக்க அரசின் அணுகுமுறை இனிமேல் உலகமக்களின் நலனுக்காக மாற்றியமைக்கப்படுமா?


முற்றுப்பெறாத கேள்விகள் இன்னும் தொடர்கின்றன. ஆனால் பதிலென்னவோ ஒன்றுதான். அது அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கட்டமைப்பும், அரசியலும், பொருளாதாரமும் எந்தவித மாற்றமுமில்லாமல் தொடரப்போகிறது என்பதே!

No comments: