Friday, November 14, 2008

தமிழ் நாட்டின் கோரமுகம்

தற்போது தமிழகத்தையை தலைக்குனிவில் ஆழ்த்தியிருக்கும் சட்டக் கல்லூரி மாணவர்களின் தாக்குதல்கள் பொதுமக்கள் கண்ணெதிரிலேயே நடை பெற்றுள்ளது. காவல்துறையினர் கல்லூரிக்கு உள்ளே நுழைய கல்லூரி முதல்வர் அனுமதி தராததால் காவலர்களும் வேடிக்கை பார்த்தனராம் ? என்ன கொடுமை சார் இது ?

சட்டக் கல்லூரி மாணவர்கள் என்பதால் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள். மீறி நடவடிக்கை எடுத்தால் அரசியல் நெருக்குதல்கள், மிரட்டல் என வருவதால் போலீஸார், சட்டக் கல்லூரி மாணவர்கள் விவகாரத்தில் தலையிடுவதே இல்லை என்பது பொதுவான ஒரு குற்றச்சாட்டு.

அதைவிட அதிர்ச்சியான தகவல் சட்டக் கல்லூரி மாணவர்களின் இந்த மோதல் அவர்களுக்கிடையே பல நாட்களாகப் புகைந்து கொண்டிருந்த ஜாதி ரீதியிலான பகையால் ஏற்பட்டது என்பதே. தமிழக கல்லூரிகளில் ஜாதி ரீதியான மோதல்கள் நீரு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது.

மாணவர் மனதில் சாதிய உணர்வு இருப்பதே வேதனையான தகவல் என்றால் , படித்த மனங்களில் கூட சாதிய எண்ணங்கள் ஊடுருவ என்ன காரணம்?

படித்தவர்கள் மத்தியிலும் தலை தூக்கும் இந்த மதம் /சாதி வெறியை ஒழிக்க என்ன வழி?

படிக்காத பாமரர்கள் சாதிப் பிரச்சினைகளுக்காக தங்களுக்குள் மோதிக் கொள்ளும் போது இதற்கெல்லாம் காரணம் கல்வியறிவு இல்லாததே, மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்று விட்டால் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாது என்று பலரும் நம்பி வந்த சூழலில் சட்டம் பயிலும் மாணவர்களே மோதிக் கொண்டது அனைவரையும் அதிரச் செய்துள்ளது.

மாணவர்களுக்கு என்ன மாதிரியான வழிகளில் மதம்/சாதிய ஒழிப்பு குறித்து போதிக்கலாம்?

மாணவர்கள் சமூக அக்கறை உள்ளவர்களாக உருவாக கல்வியில் செய்யப் பட வேண்டிய மாறுதல்கள் என்னென்ன ??

எதிர்கால சந்ததிகள் மதம்/சாதிய எண்ணம் துளியும் இல்லாமல் வாழ அவர்களுக்கு போதிக்க வேண்டிய பாடங்கள் என்னென்ன?

இதெற்கெல்லாம் ஒரே விடை, பள்ளியில் முதல் நாள் சேரும்போதே குழந்தையின் ஜாதி என்ன என்ற கேள்வி கேட்டு, குழ்ந்தை மனதில் பெயருடன் ஜாதியின் அடையாளத்தையும் சேர்த்து மனதில் பதியும் படியாக ஜாதியின் பெயரை கேட்பதை பள்ளிகள் நிறுத்த வேண்டும்.

திருமணம் என்றால் கலப்பு திருமணம்தான் "சாதி மறுப்புத் திருமணம்" பதிவுசெய படவேண்டும், அவர்களுக்கு மட்டும் தான் ரேஷன் கார்டு தரப்படவேண்டும். அப்படி முடியாத பட்சத்தில் அவர்களுக்கு ஸ்பெஷல் ரேஷன் கார்டு தரப்படவேண்டும். அவைகள் இரண்டுமடங்கு சலுகைகள் தரப்படவேண்டும். பிள்ளைகள் படிப்பில் இருந்து சிறந்த சலுகைகள் கிடைக்க வழிவகை செய்து தரப்படவேண்டும்.

சாமியை மனதில் இருந்து தூர ஏறி,
மதங்கள் தான் இந்த மதம்/சாதிய எண்ணங்கள் அடிப்படை,
அதுதான் ஊடுருவ வழி வகுத்து பின் பிரிவினை.....
அதனால் மதங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்..
இந்த சமுதாயத்தில் சாதிய எண்ணங்கள் துடைத்தெறிய சாமியை கும்புடாத.....
இந்த சமுதாயத்தில் பிரிவினை (மதம் /ஜாதி) எண்ணங்கள் துடைத்தெறிய சாமியை கும்புடாத.....
அவனை விட நீ சிறியவன் / பெரியவன் என்று உன் முலையை மழுங்கடித்து கொல்லோதே !!

இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்யும் புத்த அரசாங்கமும், பாலஸ்தீனத்தில் அராபியர்களை அழிக்கும் யூத இஸ்ரேலிய அரசும், இந்தியாவில் தினமும் குண்டுகளை வெடிக்க வைத்து மக்களைக் கொல்லும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் தினசரி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் கிறிஸ்துவ அமெரிக்க ராணுவமும் , குஜராத்திலும் ஒரிஸாவிலும் அகோர மான படுகொலைகளை நிகழ்த்தும் தீவிர இந்து அமைப்புகளும் பயங்கரமான தீவிரவாதிகள்தான். இது எல்லாம் மதம் தொடர்பான படுகொலைகள்தான் .....

இந்தத் தேசத்தின் எதிர்காலத்திற்காக வாழ்ந்த இரண்டு மாபெரும் தலைவர்களை சாதியத் தலைவர்களாக்கி, அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு சிறுமைபடுத்தும் சில அரசியல், சமூதாய அமைப்புகளைப் போல, மாணவர்களும் நடந்துகொண்டிருப்பது நம்மை வெட்கித் தலை குனியச் செய்கிறது.

கலவரம் ஏற்படுத்த பயன்படும் என்ற காரணதிர்க்க்காகவே முச்சந்திக்கு முச்சந்தி வைக்கப்படும் எல்லா சிலை களையும் பிடுங்கி ( காந்தி சிலையையும் கூட ) உடைக்க வேண்டும்...

இனிமேலும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க அரசியல் சட்டத்தில் "புலிகள் " மற்றும் "தீண்டாமை" போல "மதம்/ஜாதி" ஒழிக்கப்பட்டுவிட்டது என்றநிலையை ஏற்படுத்தி கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.
ஜாதி கர்வம் பொதுவில் தெரியும் வண்ணம் செய்யப்படும் எதுவும் தவறு என்று உறுதியாக சொல்லப்படவேண்டும் ..." மதம்/ஜாதி போடா - சட்டம் ?? "

இவை பிறவி மதம்/சாதிகள் அல்ல. இதை நீங்கள் நன்றாக உணர வேண்டும்..நம்மிடையே பல சாதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் மதம்/சாதிகள் கிடையாது.

இந்த மதம்/சாதிய அசிங்கத்தை சிந்தனையாலும், ஒருமித்த செயலாலும் துடைத்தெறிய முதலில், நம் மனதில் உள்ள மதம்/ஜாதி அழுக்கை அப்புறப்படுத்த வேண்டுகிறேன்......நன்றி...



3 comments:

E.Parthiban said...

ஒரு நிமிடம் யோசியுங்கள். நீங்கள் எந்த ஜாதியில், எந்த வீட்டில், எந்த நாட்டில் பிறந்தீர்கள் என்பதெல்லாம் தற்செயலாக இயற்கையில் நடந்த ஒரு விபத்து. வீடு மாறிப் பிறந்திருந்தால், உங்களில் யார் எந்தத் தலைவருக்காக ஆயுதம் தூக்கியிருப்பீர்கள் என்று யோசித்துப் பார்த்தால், இதன் அபத்தம் புரியும். ஜாதிப் பெருமையோ சிறுமையோ உங்கள் மீது பிறப்பால் திணிக்கப்பட்டது. நீங்கள் தேர்ந்தெடுத்தது அல்ல. அதைத் தூக்கி எறியுங்கள். ஒரு புல்லாக, ஒரு பூச்சி யாக, ஒரு புழுவாகப் பிறக்காமல், ஒரு மனிதக் குழந்தையாகப் பிறந்திருப்பதன் பயனை முழுமையாக அனுபவிக்க உங்களுக்குத் தேவை அன்பு; ஆயுதம் அல்ல..

kumudam - 21/11/2008

E.Parthiban said...

ஜாதி மோதல்களிலிருந்து விடிவே வராதா?

வரும். வந்தே தீரும். பல காலமாக ஒடுக்கப்பட்ட ஜாதியினரிடம் இப்போது விழிப்பு ஏற்படும்போது, அது பூமிப் பந்தின் உள்தகடுகள் அசைந்தால் நில நடுக்கம் ஏற்படுவது போல சமூக அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. அரசியல் தலைமைகள் செய்யத் தவறுகிற `எல்லாருக்கும் சமமான கட்டாயக் கல்வி` என்பது முதல் தேவை. ஜாதி, மதம் முதலியவற்றின் அடிப்படையில் யார் எங்கே எந்த மனித உரிமையை மீறினாலும், பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் அரசியல் உறுதி வேண்டும். எந்த ஜாதி அமைப்பு தொடர்பான நிகழ்ச்சியிலும் எந்த அரசியல், கலை, கல்வித்துறைப் பிரமுகர்கள் பங்கேற்கக்கூடாது. ஜாதி மறுத்து நடக்கும் கலப்புத் திருமணத் தம்பதியினருக்கு வேலையில் இட ஒதுக்கீடு, பொருள் உதவி முதலியன தரப்படவேண்டும். தேர்தல் ஆணையம் போல காவல் துறை சுயாட்சி அமைப்பாக்கப்பட வேண்டும். இப்படி நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான் சமூக மாற்றம், சமத்துவம் ஏற்படமுடியும்.
kumudam -21/11/2008

E.Parthiban said...

இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசலாம்.
பார்ப்பணீயம், தலித்தியம், தேவரியம், வன்னியரியம், கவுண்டரியம் என்று கூறி திட்டமிட்டு தமிழர்களை ஒன்று சேரவிடாமல் குழி பறிக்கலாம்
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கினால் கூட இது உள்நாட்டு இந்து, முஸ்லிம் பிரச்சிணை என்று திசை திருப்பி விடலாம்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக, உலகின் சிறப்பு வாய்ந்த பாராளுமன்றத்தை தாக்கிய ஒரு பயங்கரவாதியை கூட நிரபராதி என்று பிரச்சாரம் செய்து கொள்ளலாம்.
"மதசார்பின்மை என்பது எந்த ஒரு மதத்தையும் எதிர்ப்பது அல்ல. தன்னுடைய மதத்தின் தூய கருத்துக்களை ஒழுங்காக பின்பற்றி கொண்டு பிற மதத்தினருடன் இணங்கி வாழ்வதாகும்."

"பகுத்தறிவு என்பது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் தலைவர்கள் கூறியதை கிளிப்பிள்ளை போல திரும்ப கூறுவதில்லை. இன்றைய சூழலிருந்து மனிதர்களை ஏற்றமிகு வாழ்விற்கு கொண்டு செல்ல தேவையான கருத்துக்களை முன் வைத்தல்."