Thursday, November 28, 2013

எற்றுஎன்று இரங்குவ செய்யற்க

எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்அஎன்ன செய்யாமை நன்று.

திருக்குறள் (எண் 655) அதிகாரம்: வினைத்தூய்மை

பிறகு நினைந்து வருந்துவதற்குக் காரணமான செயல்களைச் செய்யக்கூடாது. ஒருகால் தவறிச் செய்தாலும், மீண்டும் அத்தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.

சி.பி.ஐ. முன்னாள் அதிகாரி தியாகராஜன்.."நான் எழுதிய வாக்குமூலத்தின் அடிப்படையில், பேரறிவாளனுக்கு, உச்ச நீதிமன்றத்தில், மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது. தமிழனான நான், ஒரு வாக்குமூலத்தை மாற்றி எழுதியதால், ஒரு தமிழ் இளைஞனின் வாழ்க்கையையே நாசப்படுத்திவிட்டேன் என்கிற  மன உறுத்தல் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அதனால்தான், இப்போது உண்மையில் நடந்தது என்ன என்பதை வெளியுலகுக்குச் சொல்கிறேன்''


ஒரு அரசு அதிகாரி சட்டத்தையும் மக்களையும் காபாற்றுவார் என்று நம்பி பணியமர்த்தினால் அவர்கள் ஆட்சியாளர்களின் கடைக்கண் படுவதற்காக ஆட்சியாளர்களின் இச்சைப்படி இப்படி அப்பாவிகளை கொடுமை செய்வது அவர்கள் தங்கள் பதவியின் நம்பகத்தன்மையையும், மக்கள் சட்டத்தின் மேல் இறையாண்மையின் மேல்  உள்ள நம்பிக்கைக்கும் பாதகம் விளைவிகிறார்கள்.   

No comments: