Thursday, February 19, 2009

விரைவில் தேர்தலை சந்திக்க போகிறீர்கள். மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள்

போலீஸ்காரர்கள் தாக்கியது வக்கீல்களை மட்டும் அல்ல. அவர்கள் நீதிபதிகளையும், பொது மக்களையும் தாக்கினார்கள். 500 வாகனங்களை நொறுக்கி இருக்கிறார்கள் .

வக்கீல்கள், போலீஸாருக்கு இடையே நடந்த மோதலில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

சென்னை உயர்நீதி்மன்றத்தில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வக்கீல்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் இன்று உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நீ‌திம‌ன்றமே கலவர பூமியாக ஆகிவிட்டதை, நீதிமன்றத்துக்கு உள்ளேயே பாதுகாப்பற்ற சூழ்நிலை தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது.
? பொது மக்களுக்கு யார் பாதுகாப்பு? எங்கு சென்று முறையிடுவது, யாரிடம் பாதுகாப்பு கேட்பது என்று தெரியாமல் பொதுமக்கள் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வரலாறு காணாத வன்முறை வெறியாட்டம் காவல் துறையினரால் நடத்தப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் கூட இதுபோன்ற வன்முறையை நடத்த முடியாது என்ற அளவுக்கு காவல் துறையினரின் அராஜகம் நடைபெற்றுள்ளது.

தமிழக வரலாற்றிலேயே நடைபெறாத வகையில் காவல்துறையினர் உயர் நீதிமன்றத்தில் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு பொறுப்பேற்று தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் கருணாநிதி பதவி விலக வேண்டும்

வன்முறையை துண்டும் எந்த ஒரு சக்தியனாலும், நீங்கள் விரைவில் தேர்தலை சந்திக்க போகிறீர்கள். மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள் !







No comments: