Sunday, August 17, 2008

வெடிக்கும் உலகம்

திருநெல்வேலிக்கு சென்ற மாதம் சென்றபோது அங்கு பள்ளிகளில் வெடிகுண்டு வைத்து இருபாதாக புரளியால் பள்ளி குழந்தைகள் , பெறோர்கள் பட்டபாட்டை எப்படி சொல்வது . தயவு செய்து இப்படி பட்ட புரளியெ கிளபிவிட வேண்டாம் அப்படி செய்தல் நமக்கு மட்டுமல்ல வருகிற தலைமுறைக்கும் தவறரான முன் உதாரணம்.

தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் ஏன் ?

இந்தியாவின் உளவுத் துறை நிறுவனங்கள் தங்களது கண்காணிப்பில் தவறி விட்டன. காவல் துறையும், புலனாய்வுத் துறையும் சரியாக செயல்படாமல் உள்ளதும் முக்கியக் காரணம். காவல்துறையும், புலனாய்வுத் துறையும் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். குற்றங்களைத் தடுக்கவும், குற்றங்கள் நடந்த பிறகு அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து தண்டிக்கவும் மேலும் முனைப்பான நடவடிக்கைகள் தேவை.

பயங்கரவாத குற்றங்கள் தொடர்பான நீதிமன்ற நடைமுறைகளும் மேம்படுத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் நடந்த இந்த தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து நாட்டில் பயங்கரவாதத் தடை சட்டம் கடந்த காலத்தில் நிறைவேற்றப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்ட தடா மற்றும் பொடா போன்ற சட்டங்களை மீண்டும் கொண்டுவரவேண்டும் ..

No comments: